பவுன்சர் பந்து தாக்கியதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்..

பாகிஸ்தானின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, பவுன்சர் பந்து தாக்கியதில் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் மர்தான் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி நடந்த உள்ளூர் போட்டியில் அகமது பங்கேற்று விளையாடியுள்ளார்.

அப்போது வேகப்பந்து வீச்சாளர் பவுன்சர் பந்தை வீச அது நேராக அகமதுடைய தலையை பதம் பார்த்துள்ளது, இதில் பலத்த காயம் அடைந்த அகமது உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவம் தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அகமதுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளது.

அதில், அகமதின் சோக மரணம் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை நிச்சயம் அணிய வேண்டும் என நமக்கு உணர்த்துகிறது. அவரின் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிடப்பட்டுள்ளது.

 

(rizmira)