மட்டக்குளிய – சொய்சாபுரப் பகுதிகளுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பஸ்(155) ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று(20) காலை முதல் அவர்கள் இந்நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சர்ச்சைக்குரிய முறையில் பஸ் ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக குற்றம் சுமத்தியே அவர்கள் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விடுதலை செய்யப்படும் வரை, தொடர்ந்தும் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, சொய்சாபுர – மட்டக்குளிய பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கமல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பஸ் ஊழியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.