பஸ் கட்டணம் குறித்து இறுதித் தீர்மானம் இன்று – கெமுனு விஜயரத்ன

இன்றைய தினம் போக்குவரத்து அமைச்சருடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான இறுதி தீர்மானமும் இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.