பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பான சதவீதம் மற்றும் புதிய கட்டணம் தொடர்பில் இன்று அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.00 மணியளவில் கூடவுள்ள நிபுணர் குழு இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் இந்த குழு கூடவுள்ளதோடு இதில் பஸ் சங்கங்களும் கலந்து கொள்ளவுள்ளன.
வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்தது.
ஆனால் இம்முறை வருடாந்த பஸ் கட்டணத் திருத்தமாக போக்குவரத்து அமைச்சினால் முன்மொழியப்பட்ட நூற்றுக்கு 03.2 என்ற வீகிதத்திற்கு பஸ் சங்கங்கள் எதிர்ப்பு வௌியிட்டதால் சிக்கல் நிலை தோன்றியது.
இதனையடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பஸ் சங்கங்கள் தயாரான நிலையில், ஜனாதிபதியின் தலையீட்டினால் இது பிற்போடப்பட்டது.
பின்னர், இன்று இது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.