பஸ் குடைசாய்ந்ததில் பாடசாலை மாணவர்கள் 2௦ பேருக்கு காயம்

அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெம்மாதகம திக்பிட்டிய பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று வயலில் குடை சாந்ததில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தோரில் 20 பாடசாலை மாணவர்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்தவரகள் அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(riz)