பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இலங்கை அணி

இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில்  பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 3 போட்டியின் முடிவில் பாகிஸ்தான் 2–1 என, முன்னிலையில் இருந்தது.

இரு அணிகள் மோதிய 4வது போட்டி கொழும்பில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வென்று களமிறங்கிய இலங்கை அணிக்கு தில்ஷன் (50), திரிமான்னே (90) தவிர மற்றவர்கள் கைகொடுக்கவில்லை. இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 256 ஓட்டங்களை மாத்திரமே தக்கவைத்தது.

எளிய இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணியின் கெப்டன் அசார் அலி (33) ஏமாற்றினார். பின் இணைந்த அகமது ஷேசாத் (95), ஹபீஸ் (70) ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

பாகிஸ்தான் அணி 40.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாகிஸ்தான் அணி 3–1 என, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் கடைசி மற்றும் 5வது போட்டி 26ம் தேதி ஹம்பாந்தோட்டையில் நடக்கிறமை குறிப்பிடத்தக்கது.

pak pak3 pak4 pak11

(riz)