பாகிஸ்தானின் அணு ஆயுதக் குவிப்பால் உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான “நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, “பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
120 அணு குண்டுகளை வைத்துள்ள பாகிஸ்தான், இன்னும் 10 ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அதிக அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாகிவிடும்.
உலகின் வேறு எந்த நாட்டையும் விட பாகிஸ்தான் அதிவேகமாக அணு குண்டுகளைக் குவித்து வருகிறது. இந்தியாவைத் தாக்குவதற்காக பாகிஸ்தான் உருவாக்கியுள்ள சிறிய வகை அணுகுண்டுகளும், அந்த நாட்டின் தொலைதூர ஏவுகணைகளும் இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
அணு ஆயுதங்களைக் குவித்து வரும் பாகிஸ்தான், பல்வேறு தீவிரவாதக் குழுக்களின் புகலிடமாகவும் திகழ்கிறது என்பதுதான் நெருடலான உண்மை. அவற்றில் சில தீவிரவாதக் குழுக்களுக்கு ஒரு சில பாகிஸ்தான் ராணுவ அமைப்புகளே பக்கபலமாக இருக்கின்றன. இது, தெற்காசியா மட்டுமின்றி உலகின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது”.
என மேற்கண்டவாறு குறித்த அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.