பாகிஸ்தானின் 13ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் இன்று(04)…

பாகிஸ்தானின் 13ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வகையிலான நாட்டின் ஜனாதிபதி தேர்தல் இன்று(04) நடைபெறுகிறது.

அதன்படி தேர்தல் முடிவுகள் நாளை(06) பிரதம தேர்தல் ஆணையாளரினால் மத்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூசைனின் பதவிக்காலம் எதிர்வரும் 8ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதுடன், மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் மறுப்பு தொிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி பதவிக்கான போட்டியில், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் ஆரிஃப் அல்வி, பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் சவுத்ரி அட்சாஸ், ஜமைத் இ உலேமே கட்சி சார்பில் மவுலானா பசல் உர் ரெகுமான் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

எனினும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த ஆரிப் அல்வியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.