(FASTNEWS|COLOMBO ) – பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த மழையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த மழைக்கு 2 குழந்தைகள் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் காயம் அடைந்தனர்.
மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.