பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய மொடல் அழகி Qandeel கொலை

பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய மொடல் அழகி Qandeel Baloch, அவரது அண்ணன் வாசிம் என்பவரால் கெளரவ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் நாட்டின் டஸ்கா நகரத்தை சேர்ந்தவர் Qandeel Baloch. இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளால் மிகவும் பிரபலமானவர்.

இவர் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் வீடியோ, ஆபாச புகைப்படங்களுடன் கூடிய புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கானை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பலமுறை தெரிவித்துள்ளார்.

ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதால், இந்த மொடல் தொழிலை விட்டுவிடுமாறு இவரது குடும்பத்தினர் இவரை பலமுறை எச்சரித்துள்ளனர்.

இதனால் அச்சம்கொண்டு, உள்துறை அமைச்சர் , மத்திய இணைஅமைச்சர் மற்றும் FIA ஆகியோரிடம் 3 வாரங்களுக்கு முன்பே பாதுகாப்பு கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இவரது சகோதரரான வாசிம், இவரை முல்தான் நகரத்தில் வைத்து கொலை செய்திருக்கலாம, மேலும் இது கெளரவ கொலையாக இருக்கலாம் என்ற முறையிலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.