பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் விலகல்

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் நாளை(13) அபுதாபியில் தொடங்குகிறது.

இதற்காக இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டிக்கு முன்னோட்டமாக இரண்டு நாட்கள் கொண்ட இரண்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதன் 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

இதனால் நாளை தொடங்கும் முதல் போட்டியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவரது இடது கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் முதல் போட்டியில் இடம்பெறமாட்டார் என்று இங்கிலாந்து அணி கேப்டன் குக் கூறினார்.

மேலும், நாளைய போட்டியில் மொயீன் அலி தொடக்க வீரராக களம் இறங்குவார் என்றும், ரஷித் டெஸ்டடில் அறிமுகமாவார் என்றும் கூறினார்.

(riz)