பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் கைகோர்க்கிறார் மாலிங்க …

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இணைக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணித் தேர்வுக் குழுவின் தலைவர் க்ரேம் லெப்ரோய் இதனைத் தெரிவித்துள்ளார்.

காயத்தினால் நீண்ட காலம் விளையாடாதிருந்த லசித் மாலிங்க, இந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் விளையாட ஆரம்பித்த போதும், சிறந்த பெறுபேற்றைப் பெறவில்லை.

இந்நிலையில் அவர் பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இணைக்கப்படவில்லை. எனினும் அவரை T20 கிரிக்கட் தொடரில் இணைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக க்ரேம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலும், முழுமையான அணித் தேர்வுத் தொடர்பிலும் ஏனைய கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)