பாகிஸ்தான் அணித் தேர்வுக்குழுத் தலைவராக இன்சமாம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவராக இருந்தவர் இன்சமாம் உல்-ஹக்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக கடந்த 2015 ஆம் ஆண்டு  முதல் பணியாற்றிய இவர் சமீபத்தில் அந்த பொறுப்பிலிருந்து விலகினார்.

46 வயதான இவர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக்குழுத் தலைவராக நேற்றையதினம் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார்.

இதுபற்றி இவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடியிருந்தாலும் தெரிவாளராக பணியாற்றுவது முதன்முறையாகும்.

உடனடியாக வெற்றியை கொண்டுவர என்னிடம் எந்த மந்திரக்கோலும் இல்லை.

வலுவான பாகிஸ்தான் அணியை உருவாக்க பல விடயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது.

எனவே வெற்றிக்கு ரசிகர்கள் பொறுமை காப்பது அவசியம்.

இங்கிலாந்துக்கெதிரான தொடருக்கு நம்பிக்கையான அணியை உருவாக்குவேன்.

அணித்தலைவர் மற்றும் பயிற்சியாளர் சொல்லும் யோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்’ என்றார்.