பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது

சொகுசு பங்களாவில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உமர் அக்மல், ஐதராபாத் நகரில் உள்ள சொகுசு பங்களாவில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

உடனடியாக இதுகுறித்து பங்களாவிற்கு அருகில் வசிப்பவர்கள் பொலிசுக்கு புகார் அளிக்கவே, அவர்கள் வந்து சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த உமர் அக்மல், இர்பான் மாலிக், அஷிம் கும்மன் ஆகியோருடன், இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உமர் அக்மலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால்  இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள உமர் அக்மல், நண்பர்கள் விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்ததன் பேரிலே சென்றதாக தெரிவித்துள்ளார்.