பாகிஸ்தான் அணி மீது ICC இற்கு மனக்கசப்பு….?

சர்வதேச கிரிக்கெட் சபையின் தவறால் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிய முத்தொடர் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று முடிந்துள்ளது. குறித்த போட்டியில் தொடர்ந்து அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்றால் இருபதுக்கு – 20 போட்டி ஐ.சி.சி தரவரிசையில், முதலிடத்தை பெற்றுவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நடைபெற்ற முத்தொடர் போட்டியில் அவுஸ்திரேலியா அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன், இறுதி போட்டியிலும் நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றுள்ளது.

இதனால் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியை பின்தள்ளி, 125 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா அணி முதலிடத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தசம புள்ளிகளின் அடிப்படையில் பாகிஸ்தான் அணியே முதலிடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தற்போது 125.65 புள்ளிகளுடன் மீண்டும் பாகிஸ்தான் அணி முதலிடத்தை பெற்றுள்ளது.

 

#g-reeshma