பாகிஸ்தான் அணு குண்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டவை அல்ல – இந்தியாவுக்கு மிரட்டல்

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்கிறது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

இந்நிலையில் வருகிற 10–ம் திகதி ரஷியாவின் உபா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டின் போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

அதை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவ மந்திரி ஹவாஜா ஆசிப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் உளறியுள்ளார்.

அவர் நிரூபர்களிடம் கூறுகையில்;

‘‘பாகிஸ்தானிடம் உள்ள அணு குண்டுகள் பார்வைக்கு மட்டும் வைக்கப்படவில்லை. அவற்றை எந்நேரமும் பயன்படுத்தவே வைத்திருக்கிறோம். தற்போது இந்தியாவுடன் போர் அபாயம் இல்லை. ஆனால் போர் அபாயம் என்பது நிரந்தரமானது தான்.

எனவே, அணு குண்டுகளை பயன்படுத்தக் கூடிய வகையில் இந்தியாவுடன் போர் நீளக்கூடாது என பிரார்த்தனை செய்கிறோம். ஒருவேளை போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் ராணுவம் அணு குண்டுகளை பயன்படுத்தும். தனது நாட்டை பாதுகாத்து கொள்ளும் வகையில் பாகிஸ்தான் முழு திறனுடன் உள்ளது’’ என்றார்.

(riz)