பாகிஸ்தான் அரசின் நிதி உதவியுடன் மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் வீடுகளை இன்று(07) இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செயீத் சக்கீல் ஹூசைன் பார்வையிட்டுள்ளார்.
கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெயர்ந்து தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் மன்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கான குறித்த வீட்டுத் திட்டம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் குறித்த வீடமைப்பு திட்டத்திற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மன்னார் வீட்டு திட்டங்களை பார்வையிட்ட பின் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.