(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிய நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை பாகிஸ்தானில் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் விளையாடுவதற்கு உறுதிபடுத்த அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை நேரம் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கடந்த முறை நடைபெற்ற போட்டி இந்தியாவில் நடைபெறவிருந்த நிலையில், பாகிஸ்தான் இந்தியாவில் விளையாட சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் தொடரில் இந்தியா வருகையை உறுதிப்படுத்த அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை காலம் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ‘ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியா சம்மதம் தெரிவிக்குமா? என்பதை நாங்கள் பார்க்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசிம் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடத்த முடியவில்லை என்றால், போட்டி பொதுவான இடத்திற்கு மாற்றப்படுவது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு எடுக்க முடியும். இந்தியாவை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.