பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலநடுக்கம்…

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதி மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதிகளில் இன்று09) காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதிகளான பெஷாவர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்க புவி ஆய்வு மையம் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்படுள்ளதாக கூறியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், மக்கள் பீதியடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.