மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரபல முன்னணி வீரரான மார்லன் சாமுவேல் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
காணொளி ஒன்றினை வெளியிட்டு அவர் தெரிவிக்கையில்;
“….ICC மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டிய ஏற்பாடுகளை செய்வது இன்றைய தலைமுறையின் அவசியம். பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டியை பார்க்க அதிகளவு ஆர்வமாக இருக்கின்றார்கள். பாகிஸ்தானில் கிரிக்கெட் நடத்தப்பட வேண்டும்.
நான் சாகும் வரை இதற்கான தொடர்ந்து ஊக்குவிக்கும் பணியில் ஈடுபடுவேன். பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு சிறந்த பாதுகாப்பு வழங்கிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய விரும்புகிறேன். பாகிஸ்தான் இராணுவத்துக்கு என்னை எப்பொழுது அழைக்கின்றீர்களோ அப்போது நான் இராணுவத்தில் இணைவேன்…” என தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளி…
[youtube url=”https://www.youtube.com/watch?v=_UgH5ZahOHY” width=”560″ height=”315″]