இந்தியா எல்லை தாண்டி வந்து விடுக்கும் மிரட்டலுக்கு பயப்படும் கோழை அல்ல பாக்பாகிஸ்தான், என அந்நாட்டு உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் தெரிவித்துள்ளார்.
மியன்மார் தாக்குதல்; பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என இந்தியா கூறியதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் அமைச்சர்;
மணிப்பூரில் இந்தியா ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த பயங்கரவாதிகள் மியன்மார் எல்லையில் பதுங்கி இருப்பதை அறிந்த இந்திய ராணுவம், மியன்மார் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மியன்மாரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறுகையில்;
மணிப்பூரில் இந்திய ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியே மியன்மாரில் பயங்கரவாத முகாம் மீது இந்தியாவின் தாக்குதல். இது மற்ற நாடுகளுக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கை என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் அமைச்சர் நிசார் அலி கான், மியன்மாரில் நடந்ததைப் போல பாகிஸ்தானிலும் நடத்தலாம் என இந்தியா பகல் கனவு காணக் கூடாது. இது பாகிஸ்தான். மியன்மார் அல்ல.
பாகிஸ்தானை இந்தியா மியன்மார் என்று நினைத்து விடக் கூடாது. எல்லை தாண்டி எந்தப் படை வந்தாலும் பாகிஸ்தான் படைகள் தக்க பதிலடி கொடுக்கும்.
எனவே இதுதொடர்பாக இந்தியாவும், இந்தியர்களும் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.