பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான ‘பிஎன்எஸ் சைப்’ கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று(05) வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பானமுறையில் வரவேற்றனர்.
123 மீட்டர் நீளம் மற்றும் 13.2 மீட்டர் அகலத்தைக் கொண்ட இக்கப்பல், 225 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது.
மேலும், எதிர்வரும் புதன்கிழமை(08) நாட்டை விட்டு புறப்படவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.