பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் கிரிக்கெட் தொடர் ஒன்றை நடாத்த திட்டம்…

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, பங்களாதேசுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கிரிக்கெட் தொடர் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக பங்களாதேஷ் அணியை உத்தியோகபூர்வமாக அழைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக சர்வதேச கிரிக்கெட் அணிகள் விளையாட மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் லாஹுரில் வைத்து தாக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும்.

இந்நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கான குழு ஒன்றை அனுப்புமாறு, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் பாகிஸ்தான் கோரவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.