(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணி பாகிஸ்தானில் மூன்று இருபதுக்கு – 20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்திருந்தது.
இலங்கை வீரர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உறுதியின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் சங்கம் இதற்கு சம்மதம் தெரிவித்தது.
3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் செப்டெம்பர் 27,29 மற்றும் ஒக்டோபர் 02 ல் கராச்சியில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் லாஹூரி ஒக்டோபர் 05,07 மறறும் 9 ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த இந்தத் தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான திமுத் கருணாரத்ன, லசித் மாலிங்க, அஞ்சலோ மேத்யூஸ் போன்ற வீரர்கள் பங்கேற்க தயக்கம் காட்டியுள்ளனர்.