பாகிஸ்தான் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருபவர் மம்னூன் ஹூசைன். இவரது பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 9-ம் திகதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாட்டின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானின் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெறுகிறது. இதற்கான அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.