பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு – ஆமிர் நீக்கம்…

அவுஸ்திரேலிய அணியுடன் எதிர்வரும் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்காக பாகிஸ்தான் குழாம் அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

17 வீரர்கள் கொண்ட குழாமில் தலைமை சப்ராஸ் அஹமட் இற்கு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமத் ஆமிர் குறித்த குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஒக்டோபர் 07ம் திகதி துபாயில் ஆரம்பமாகவுள்ளது.

பாகிஸ்தான் குழாம் : சப்ராஸ் அஹமட் (c/wk), அசார் அலி, பகர் சமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், அசாத் ஷபீக், ஹரீஸ் சொஹைல், உஸ்மான் சலாஹுதீன், யாசிர் ஷா, ஷப்தாப் கான், பிலால் அசீப், முஹமட் அப்பாஸ், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், பாஹிம் அஷ்ரப்,மீர் ஹம்சா, முஹமட் ரிஸ்வான் (wk).