பாகிஸ்தான் தனியார் மருத்துவமனை அருகில் மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல்

பாகிஸ்தான் குவெட்டா நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பலூசிஸ்தான் அல்-கையர் மருத்துவமனை அருகே வாகனம் ஒன்றின் மூலம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாதுகாப்பு படையினர் உள்பட 4 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 8-ம் தேதி நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வழக்குரைஞர்கள். போலீஸார், செய்தியாளர்களும் இந்த குண்டு வெடிப்பில் பலியாகினர். நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.