பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் அதிரடி தாக்குதல் – பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்

பாகிஸ்தானின் பசா கான் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 3 ஆயுததாரிகளால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தாக்குதல்களில், குறைந்தது 15பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பல்கலைக்கழகத்தில் சுமார் 3,000பேர் இருப்பதாகவும் தப்பிவந்தோரின் கருத்தின்படி சுமார் 60பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=i9K7ftOc3oA” width=”560″ height=”315″]

இதில், வேதியியல் ஆசிரியர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு இராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், 5 பேர் குண்டுகளால்  தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பல்கலைகழகத்திற்கு பல்வேறு நுழைவாயில்கள் இருப்பதனாலேயே  தீவிரவாதிகள் இலகுவில் உள்நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

pakistan

பாகிஸ்தானின் சர்ஷாதா பல்கலைக்கழகத்தின் மீது ஆயுததாரிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதலினால் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதா அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் எத்தனை ஆயுததாரிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பதஞு தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன் தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை. இதுவரை ஆயுததாரிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் எவரேனும் பணயக்கைதிகளாக பிடிபட்டுள்ளனரா என்பது தொடர்பிலும் தகவல்கள் வெளிவரவில்லை.

தற்போதும் தாக்குதல் நடவடிக்கை பல்கலைக்கழகத்தினுள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திலுள்ள 3000 மாணவர்களுக்கும் 600 விருந்தினர்களுக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 பச்சா கான் பல்கலைகழகத்தில் ஒவ்வொவொரு தளமாக சோதனை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.