பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாகித் ககான் சத்தியப்பிரமாணம்..

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாசி, நேற்று(04) உத்தியோகபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்து வைத்துள்ளதாக பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்பலமானது.

குறித்த இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நவாஸ் ஷெரிப்க்கு கடந்த 28ஆம் திகதி உத்தரவிட்டதையடுத்து, தனது பதவியை அவர் இராஜினாமா செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)