பாகிஸ்தான் முத்திரையுடன் பறந்து வந்த புறா

வெள்ளைப் புறா என்பது அமைதிக்கும், சமாதானத்துக்குமான அடையாளமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியில் பாகிஸ்தான் முத்திரை குத்தப்பட்ட நிலையில் பறந்து வந்த புறா ஒன்று மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதனைப் பார்த்த இளைஞர் ஒருவர் உடனடியாக அதனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அதனை எக்ஸ்-ரே எடுத்தனர்.

அது உளவாளி புறாவா? உடலில் ஏதேனும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டது. அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகுதான் காவல்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனராம்.