பாகிஸ்தான் வீரர்களுக்கு பிரியாணி தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி உண்பதற்கு அணியின் பயிற்றுவிப்பாளரும் தெரிவுக்குழுவின் தலைவருமான மிஸ்பா உல் ஹக் தடை விதித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்களிற்கான உணவு திட்டமொன்றை வெளியிட்டுள்ளதுடன், அதனை கட்டாயமாக கடைப்பிடிக்கவேண்டும் என மிஸ்பா உல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி வீரர்களின் உடற்தகுதி வீழ்ச்சியடைவதை கருத்திற் கொண்டு தமது அணி வீரர்கள் மேலும் உற்சாகத்துடன் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு வழிவகுக்ககூடிய உணவு நடைமுறையை மிஸ்பா உல் ஹக் அறிவித்துள்ளார்.

வீரர்கள் அனைவரும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பிரியாணி,எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், பர்கர், பீட்ஸா மற்றும் இனிப்பு ஆகிய பொருட்களை சாப்பிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.