நியூஸிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் இன்று(22) இடம்பெற்ற முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பாபர் அஷாம் 41 ஓட்டங்களையும் ஹசன் அலி 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.
ஏனைய வீரர்கள் எவரும் குறிப்பிடத்தக்களவு ஓட்டங்களை பெறவில்லை. பந்து வீச்சில் டிம் சவுதி 13 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய நியூசிலாந்து அணி 15.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் கொலின் மன்ரோ ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
#reeshma