பாடகியாகும் திரிஷா

அண்மைக்காலமாக நடிகைகள் டப்பிங் பேசுவது மற்றும் பின்னணி பாடுவது என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமந்தா, திரிஷா, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் தங்களுடைய சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறார்கள்.

அதுபோல், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் பாடகிகளாக அவதாரம் எடுத்துள்ளனர். இந்த வரிசையில் புதிதாக திரிஷாவும் பாடகியாக அவதாரம் எடுக்க இருக்கிறார்.

தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா ‘நாயகி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திரிஷாவின் முகாமையாளர் கிரிதர் தயாரித்து வருகிறார். கோவி இயக்கி வருகிறார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு சிறப்பான பாடலை திரிஷா பாட உள்ளாரராம்.