நடிகைகள் ரம்யா நம்பீஸன், நித்யாமேனன், லட்சுமிமேனன் போன்றவர்கள் படங்களில் சொந்த குரலில் பாடல்களும் பாடுகின்றனர். இதனால் திரைப்பட பாடகிகளுக்கு வரும் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுகிறதா? என்றதற்கு இசை அமைப்பாளர் பாலமுரளி பாலு பதில் அளித்தார்.
இவர், டிராபிக் ராமசாமி, ஹரஹர மஹாதேவகி, இருட்டுஅறையில் முரட்டு குத்து, பீச்சாங்கை படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
அவர் கூறும்போது
,’ரம்யா நம்பீஸன், நித்யாமேனன், லட்சுமிமேனன் திரைப்படங்களில் பாடல்கள் பாடினாலும் அவர்களது குரல் குறிப்பிட்ட பாடல்களுக்கு மட்டுமே பொருந்தும்.
குரல் வளம் உள்ளவர்கள் பாடல்பாடுவதில் தவறில்லை. அதனால் திரைப்பட பாடகிகளின் வாய்ப்பு பறிபோகாது.
இசையுலகில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என ஜாம்பவான்கள் உள்ளனர். அவர்களை முன்னுதாரணமாக கொண்டு பலர் இசை அமைக்க வருகிறார்கள்.
நானும் அப்படித்தான் வந்தேன். எனக்கென்று திரையுலகில் பின்னணி எதுவும் கிடையாது. இசை ஆல்பங்கள் வெளியிட்டு அதன் மூலம் ஏற்பட்ட அறிமுகத்தில்தான் திரைப்படத்துக்கு வந்தேன்.
தற்போது கஜினிகாந்த், தட்றோம் தூக்கறோம் படத்துக்கு இசை அமைக்கிறேன். ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்பது என் ஆசை’ என்றார் பாலமுரளி பாலு.