பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முப்படையினர் உறுதி – கல்வி அமைச்சு

(FASTNEWS | COLOMBO) – பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முப்படையினரும், பொலிஸாரும், சிவில் படையணினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பாதுகாப்புக்காக பெற்றோர்களை அழைக்கும் அவசியம் கிடையாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை வைத்து செயற்படுமாறும் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.