க.பொ.தராதர உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிக்கான நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட 37 பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக செப்டெம்பர் மாதம் 06ம் திகதி திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அது தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக 2018 செப்டெம்பர் மாதம் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
