பாடசாலை இலவச சீருடை முறைக்கு வருகிறது காசோலை..

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைகளை வழங்குவதற்காக காசோலை முறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இலவசமாக பாடசாலை சீருடைகளை நேரடியாக வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்தாண்டு பாடசாலை சீருடைகளை வழங்குவதற்காக வவுச்சர் முறைமை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

எனினும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் தரமான சீருடைகளை வழங்குவதற்காக வவுச்சர்களை அறிமுகம் செய்திருந்தது.

எனினும் வவுச்சர் முறையிலும் சில குளறுபடிகள் காணப்பட்டதாக பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வவுச்சர் முறைமைக்கு பதிலீடாக காசோலைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.