(FASTNEWS|COLOMBO) பாடசாலைகளுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருப்பதனால் பெற்றோர்கள் எதுவித அச்சமும் இன்றி தங்களது பிள்ளைகளை தவறாது பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, பாடசாலை தவணை பரீட்சைகளை நடத்தும் நடைமுறை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.