பாடசாலை நீர்த்தடாகத்தில் கைக்குண்டு.. விசாரணைகள் முன்னெடுப்பு

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்று நுகேகொடை பகுதியில் உள்ள பாடசாலை நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாடசாலை வளாகத்தில் வெடி குண்டு அகற்றல் பிரிவினர் சோதனையுற்ற போதே குறித்த  இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் கொஹூவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.