வெள்ளை வேன் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தன்னைக் கடத்திச் சென்று தன் மீது தாக்குதல் நடாத்திவிட்டு ஹந்தான பிரதேசத்தில் இறக்கி விட்டுச் சென்றதாக பாடசாலை மாணவர் ஒருவர் கொடுத்த பொய்யான முறைப்பாடு தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மாணவன் கண்டி பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயின்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் தனது நண்பர்களுடன் சென்று ஹந்தான பிரதேசத்திலுள்ள நிகழ்வொன்றில் மது அருந்தியுள்ளதாகவும், மது அருந்தி விட்டு வீட்டுக்குச் சென்றால் பெற்றார் அடிப்பார்கள் என்ற அச்சத்தில் பொய்யான வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்