பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ விசேட காப்புறுதி திட்டம் அறிமுகம்…

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தும் தேசிய வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த விசேட காப்புறுதி திட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதேவேளை, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பூரண அனுசரணையுடன், இந்த காப்புறுதி திட்டத்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும் விசேட காப்புறுதி அட்டை ஒன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நோய்களுக்கு சிகிச்சை பெறும் பொழுது தனியார் வைத்தியசாலைகளில் ஏற்படும் செலவினங்களில் 20 வீதத்தை இந்த காப்புறுதி திட்டத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 2700 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.