பந்து காப்பில் இடம்பெற்ற தவறுகளாலேயே தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தோற்றோம் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
பந்து காப்பதில் இலங்கை அணியானது நேற்று(01) பாடசாலை மாணவர்களது மட்டத்திலேயே காணப்பட்டனர் என நேற்று போட்டியின் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேத்யூஸ் தெரிவித்திருந்தார்.
தென்னாபிரிக்காவுடன் இலங்கை விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. குறித்த இரு அணிகளுக்கும் இடையிலான 03வது போட்டி எதிர்வரும் ஞாயிறன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.