பாடசாலை விடுமுறை காலத்தில் டிசெம்பர் 07 ஆம் திகதி முதல் ஜனவரி 05 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை மற்றும் பதுளை வரையில் விசேட இரண்டு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்த இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, டிசெம்பர் 07, 09,11,13 ,15,17,19,21,23, 25,27 மற்றும் 29 மற்றும் ஜனவரி 01 ,03 , 05 நாட்களில் குறித்த புகையிரதங்கள் கொழும்பு கோட்டையில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.00 மணிக்கு பதுளை சென்றடையும்.