பாடல் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய தயாசிறி!

நுவரெலியா குதிரை பந்தய திடலின் ரோயல் ட்ரூப் கழகத்தின் (ROYAL TURF CLUB) ஏற்பாட்டில் குதிரை சவாரி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை பார்வையிடுவதற்காக நாடளாவிய ரீதியில் இருந்ருது பலர் வருகைத் தந்திருந்தனர். இந்நிகழ்வில் விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

 

அதுமட்டுமில்லாமல் இரண்டு பாடல்களையும் பாடி அவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் குதிரை சவாரி, இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வே றுநிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.