(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டு இன்று(19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.