பாண்டியாவுக்கு பதிலாக ஆசியக் கிண்ண அணிக்கு தீபக் வரவழைக்கப்பட்டார்…

ஆசியக் கிண்ண தொடரின் பாகிஸ்தான் அணியுடனான நேற்றைய(19) போட்டியில் உபாதைக்கு உள்ளாகிய இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக வலக்கை பந்து வீச்சாளர் தீபக் சஹார் குழாமில் இணைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் இன்னிங்சில் 18வது ஓவரில் 05வது பந்தினை வீசிய பாண்டியா அவரது முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக மைதானத்தினை விட்டும் வெளியேறி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் சபையானது ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், பாண்டியா உபாதைக்கு உள்ளாகியதால் அவர் ஆசியக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தது.