பாதங்களில் வெடிபிற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்னு தெரியுமா?

பாத வெடிப்பிற்கான காரணம் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. சாதாரண பாத வெடிப்பு தானே என்று விட்டுவிடக் கூடாது. இந்த பாத வெடிப்பானது, பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதால் உண்டாகிறது. இதனால் வெடிப்புகள் ஏற்பட்டு, அந்த வெடிப்பு புண்களாக மாறி நடக்கும் போது மிகவும் வலியை தருவதாகவும் உள்ளது. இந்த பாத வெடிப்புகள் மூலமாக கிருமிகள் தொற்று உண்டாகும் வாய்ப்பு உள்ளது. பாத வெடிப்புகள் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உண்டாகிறது.

நமது பாதங்களின் அழகை கெடுக்கும் இந்த பாத வெடிப்பை சீக்கிரமாக போக்க வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய முறைகளை இந்த பகுதியில் காணலாம்.

வெதுவெதுப்பான நீர்:
தினமும் மாலை நேரத்தில், உங்களது பாதங்களை வெதுவெதுப்பான நீரில் உங்களது பாதங்களை 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

மாய்சுரைசர்:
தினமும் இரவு உறங்கும் போது பாதங்களில் மாய்சுரைசர் அல்லது வாசலின் தடவி பின்னர் காலுறை அணிந்து உறங்க வேண்டும். இதனால் பாதங்கள் மிருதுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

தேன்:
பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள்.

ஆலிவ் ஆயில்:
பாதங்கள் பித்த வெடிப்புடன், வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும்.

பப்பாளி:
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும்.

கடுகு எண்ணெய்:
கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

தேங்காய் எண்ணெய்:
தினமும் இரவு தூங்க போவதற்கு முன்னர் கால்களில் தேங்காய் எண்ணெய்யை தடவிக் கொண்டு உறங்கினால் கால்களில் உள்ள பித்த வெடிப்புகள் சீக்கிரமாக குறைந்து விடும்.