கூட்டு எதிர்க் கட்சியின் நடைபவனியில் ஈடுபடுத்தப்பட்ட 12 சிறுவர்கள் சி.சி.ரி.வி. காட்சிகளை வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களிடம் இன்று அல்லது நாளை விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பணியகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறுவர்களை பயன்படுத்தி அரச தலைவர்களுக்கு எதிராகவும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பட்டுள்ளமை தொடர்பிலேயே விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.