பாதாளக்குழு மற்றும் போதைப் பொருளுடன் தொடர்புடைய பிரபல கைதிகள் பூஸ்ஸ சிறைக்கு மாற்றம்

(FASTNEWS |COLOMBO) – வெலிக்கடை, மஹர சிறைச்சாலைகளிலிருந்து பாதாளக்குழு மற்றும் போதைப் பொருளுடன் தொடர்புடையக் குற்றச்சாட்டில் மரணத் தண்டணை, ஆயுட்கால தண்டனை விதிக்கப்பட்ட 13 கைதிகள் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் குறித்த கைதிகளை பலத்த பாதுகாப்பின் மத்தியில் சிறைவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி, நீதியமைச்சரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இடமாற்றப்பட்ட கைதிகளுள் சூசை, குடு சியாம் மற்றும் வெலே சுதாவின் சகாவான கௌதன் உள்ளிட்ட பிரபல கைதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.