நிலவும் காலநிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(21) இடம்பெற்றது.
இதன்போது, நிவாரணங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அங்கு விளக்கம் அளித்தார்கள். மாவட்ட பிரதேச செயலாளர்களுடன் இணைந்து நிவாரணங்களை வழங்குமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார்.
வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரிப்பதற்கான அபாயம் காணப்படுவதால் முப்படையினரை தயார் நிலையில் வைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார்.